< Back
மாநில செய்திகள்
700 மில்லி கிராம் தங்கம்...மெமரி கார்டுகளில் தங்க ஓவியம் செய்து அசத்திய கோவை ஓவியர்
மாநில செய்திகள்

700 மில்லி கிராம் தங்கம்...மெமரி கார்டுகளில் தங்க ஓவியம் செய்து அசத்திய கோவை ஓவியர்

தினத்தந்தி
|
6 Jan 2024 6:04 PM IST

மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர்.

கோயம்புத்தூர்,

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. இவர் தனியார் நிறுவனத்தில் தங்க நகை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர். இவர் அடிக்கடி கலை பொருட்கள் மூலம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உழவர்களை வணங்கும் விதமாகவும் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்.

700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பானை, சூரியனை வழிபட்டு நிற்பது போன்ற மாடுகள், தை பொங்கல் கொண்டாடும் உழவர் கையில் ஏர் கலப்பையுடன் மாடுகளுடன் நிற்பது போன்றும், ஜல்லிக்கட்டு காளையை ஒருவர் அடக்குவது போன்றும் வரைந்திருக்கிறார். மேலும், இதனை மெமரி கார்டுகளின் பின்புறம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போன்று வடிவமைத்திருக்கிறார். இந்த பணியை முடிப்பதற்கு இரண்டு நாட்கள் செலவழித்ததாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்