< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பணம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்...!
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பணம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்...!

தினத்தந்தி
|
17 July 2023 5:49 PM IST

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 லட்ச ரூபாய் பணத்துடன், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை நீடித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் நகைகளும் பறிமுதல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்