< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
70 மதுபாட்டில்கள் பறிமுதல்
|20 Jun 2023 12:28 AM IST
70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள அன்னபூரணியாபுரம், செவல்பட்டி, தாயில்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது செவல்பட்டி அருகே உள்ள அன்னபூரணியாபுரம் பாலத்தின் அருகே பொன் இருளாண்டி (வயது 40) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பொன் இருளாண்டியை கைது செய்தார். அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த கணேஷ் (45) என்பவர் பாலத்தின் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.