< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
போரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது
|11 Aug 2023 4:11 PM IST
போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65), ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து விசாரணை மேற்கொண்டதில் 7 வயது சிறுமியிடம் பூபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பூபதியை போரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.