< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் 7 வாகனங்கள் பறிமுதல்
|13 Oct 2023 11:39 PM IST
ஜெயங்கொண்டத்தில் 7 வாகனங்கள் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உரிமம் இல்லாத வாகனங்களை வைத்து பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதாக புகார் வந்ததையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையிலான, மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன் உள்ளிட்ட குழுவினர் ஜெயங்கொண்டம் நகரில் நேற்று காலை பள்ளி நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிமல் இல்லாமல் இயக்கப்பட்ட 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.