< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
லாரி உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்
|11 Jan 2023 12:15 AM IST
திண்டுக்கல்லில் சாலை விதிகள் மீறிய லாரி உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனப்பட்டி அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த லாரியில் விதியை மீறி பாரம் ஏற்றியதோடு, தகுதி சான்று புதுப்பிக்காதது தெரியவந்தது.
அதேபோல் சாலை வரி செலுத்தாத 4 மினிவேன்கள், தகுதி சான்று புதுப்பிக்காத கார் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவையும் சிக்கின. இதை தொடர்ந்து லாரி உள்பட 7 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அந்த 7 வாகனங்களும் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.