< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறைபிடிப்பு
மாநில செய்திகள்

புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
3 Jan 2024 2:11 AM IST

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் சுமன்(வயது 33). மீனவர். இவர் நேற்று அதிகாலை தனது பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த 6 மீனவர்களுடன் புதுச்சேரி வீராம்பட்டினம் கடல் பகுதியில் கனவாமீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

கடலூர்,

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் சுமன்(வயது 33). மீனவர். இவர் நேற்று அதிகாலை தனது பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த 6 மீனவர்களுடன் புதுச்சேரி வீராம்பட்டினம் கடல் பகுதியில் கனவாமீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், அவர்களிடம் ஏற்கனவே இந்த பகுதியில் கனவா மீன்பிடிக்கக்கூடாது என்று கூறியும், எதற்காக இங்கு வந்து மீன்பிடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது 2 தரப்பு மீனவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், கடலூர் தாழங்குடா மீனவர்கள் 7 பேரையும் படகுடன் சிறைபிடித்து, வீராம்பட்டினம் கிராமத்திற்கு கொண்டு சென்று, ஊர் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் கடலூர் மீனவர்கள், இனிமேல் இந்த பகுதிக்கு வந்து மீன் பிடிக்க மாட்டோம் என்றனர். இதையடுத்து 7 பேரையும் வீராம்பட்டினம் மீனவர்கள் விடுவித்தனர். கடலூர் மீனவர்களை புதுச்சேரி மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்