< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை -  இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை - இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு

தினத்தந்தி
|
9 Nov 2022 11:30 AM IST

தமிழக மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு,

ராமேசுவரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

அந்த 7 மீனவர்களும் தற்போது இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2,3 தினங்களில் அவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் வந்த படகு குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்