கன்னியாகுமரி
குமரியில் 7 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
|குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் திருவட்டார் தாசில்தார் தாஸ் தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் முருகன் திருவட்டார் தாசில்தாராகவும், தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டியம்மாள் செண்பகராமன்புதூர் டாஸ்மாக் சில்லறை வணிக உதவி மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் விஜயகுமாரி நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் சேகர் செண்பகராமன்புதூர் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இசபெல் வசந்தி ராணி அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துணை தாசில்தார்கள்
இதே போல துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு துணை தாசில்தார் பாலமுரளி கிருஷ்ணன் நாகர்கோவில் கோட்டாட்சியரின் தலைமை உதவியாளராகவும், நாகர்கோவில் கோட்டாட்சியர் தலைமை உதவியாளர் எட்வர்ட் ராஜசேகர் விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விளவங்கோடு மண்டல துணை தாசில்தார் ரியாஸ் அகமது விளவங்கோடு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.