< Back
மாநில செய்திகள்
7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
மாநில செய்திகள்

7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

தினத்தந்தி
|
17 Jun 2022 9:42 AM IST

இலங்கையில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

ராமநாதபுரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அங்கு பல போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அதே சமயம், இலங்கைத் தமிழர்கள் பலர் அங்கிருந்து சிறிய படகுகள் மூலமாக தங்களது குடும்பத்தினரோடு கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் இதுவரை 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அரிச்சல்முனை கடல் பகுதிக்கு பைபர் படகு மூலம் வந்திறங்கிய அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்களை அகதிகள் முகாமிற்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்