< Back
மாநில செய்திகள்
தஞ்சை அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
7 Sept 2023 2:05 AM IST

தஞ்சை அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி நீலாவதி (வயது 55). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து பேத்தியை பள்ளியில் விடுவதற்காக அழைத்துச்சென்றார். பின்னர் பேத்தியை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஒரு மர்மநபர் எதிரே வந்தார்.அப்போது மர்ம நபர், நீலாவதி அருகே வந்த போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார். இதனைக்கண்டு திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் 7 பவுன் நகையுடன் தப்பிச்சென்று விட்டார். திருடிச்சென்ற நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நீலாவதி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்