< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பெண் சத்துணவு அமைப்பாளரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
|2 Jun 2023 2:13 AM IST
பெண் சத்துணவு அமைப்பாளரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி:
வளநாடு அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 42). இவர் வேம்பனூர் பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறது. பள்ளி விடுமுறை என்பதால் விழுப்புரத்தில் உள்ள கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு நேற்று கைகாட்டியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய மொபட்டை எடுத்து கைகாட்டி - பாலக்குறிச்சி ரோட்டில் வளநாடு பெரியகுளம் கலிங்கி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 வந்த மர்மநபர்கள் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், வளநாடு போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.