< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்லாச்சி (வயது 76). இவர் நேற்று காலை புல்லலக்கோட்டை ரோட்டில் தனது வீட்டின் அருகில் வசிக்கும் செல்வகுமாரி மற்றும் இசக்கியம்மாளுடன் நடை பயிற்சிக்கு சென்றார். அங்குள்ள முனியசாமி கோவில் வரை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 நபர்கள் செல்லாச்சியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விட்டனர். தகவல் அறிந்த விருதுநகர் துணை போலீஸ் பவித்ரா இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து மற்றும் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக செல்லாச்சி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்