புதுக்கோட்டை
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு
|ஆலங்குடி அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
தாய் வீட்டிற்கு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி இன்னாசியம்மாள் (வயது 34). இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இன்று மாலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் குழந்தைகளுடன் இறங்கி உள்ளார்.
தங்க சங்கிலி திருட்டு
மேலும் அங்கு இன்னாசியம்மாள் தனது குழந்தைகளை கவனித்து கொண்டு வேறு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது பையை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்த்தும் திருட்டு போன பை கிடைக்கவில்லை.
வலைவீச்சு
இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் இன்னாசியம்மாள் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியுடன் பையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
இன்னாசியம்மாள் புதிதாக வாங்கிய 7 பவுன் சங்கிலியை தனது தாயிடம் காண்பிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.