< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 7¾ பவுன் சங்கிலி பறிப்பு
|2 Oct 2022 3:26 AM IST
மூதாட்டியிடம் 7¾ பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூரை அடுத்த காளவாய்பட்டி அழுவான் கொட்டத்தை சேர்ந்தவர் சின்னம்மாள்(வயது 70). இவர், பூ மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று அதிகாலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த மர்மநபர், சின்னம்மாளின் வாயை பொத்தி கட்டிங் பிளேடால் வெட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இது குறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.