தேனி
தேனி உள்பட 7 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி
|தேனி உள்பட 7 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது
தேனியில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் இன்று நடந்தது. நேரு சிலை சிக்னல் பகுதியில் நடந்த இந்த மனித சங்கிலிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் லாசர், மாவட்ட செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், ம.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் பொன்முடி, சமூக நல்லிணக்க பேரவை ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு கிறிஸ்தவ நல பேரமைப்பு, ஜமாஅத் இஸ்லாமிய ஹிந்த் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் பேசினர். தேனியை போல், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களிலும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இன்று நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாலையோரம் கைகோர்த்து நின்றனர்.