< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் 7 பேர் படுகாயம்
|9 Sept 2022 2:13 PM IST
மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனத்தில் இருந்து ஆம்னி பஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற இடத்தில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தார். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.