< Back
மாநில செய்திகள்
கோவிலுக்கு சென்று திரும்பியபோதுமரத்தில் கார் மோதி 7 பேர் காயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கோவிலுக்கு சென்று திரும்பியபோதுமரத்தில் கார் மோதி 7 பேர் காயம்

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

நாமகிரிப்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கம். இவரின் மனைவி, மாமனார் சந்தானம், இவரது மனைவி குப்பம்மாள், மகன்கள் நிதிஷ் மற்றும் ஸ்ரீதர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்தநிலையில் இவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நாமகிரிப்பேட்ைட அடுத்த முள்ளுக்குறிச்சி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் காா் டிரைவர் உள்பட 7 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்