தேனி
7 பேர் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது
|தேவதானப்பட்டி அருகே வியபாரி கொலை வழக்கில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவாா்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இறைச்சி வியாபாரி. கடந்த மாதம் 3-ந்தேதி ஜெகதீஸ்வரன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கெங்குவார்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 23), மணிகண்டன் (24), விஜய் (25), சதீஷ்குமார் (23), முத்துக்குமார் (24), விக்கி (எ) விக்னேஷ் (22), ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்த ரிசாத் ராஜ் (25) ஆகிய 7 பேைர தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே, மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரேம்குமார் உள்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகுளம் கிளை சிறையில் உள்ள அவர்கள் 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.