< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
|10 March 2023 1:23 PM IST
பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 330 கிராம் குட்கா பாக்கெட்டுகள், 168 சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 19 பேரை போலீசார் கைது செய்தனர்.