< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
|22 Oct 2023 11:10 PM IST
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெங்கமேடு, வாங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்துப்பாளையம் கோதூர் செல்லும் சாலையில் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 23), கனகராஜ் (30), கண்ணன் (38), கோயம்பள்ளி காட்டுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (34), துளசிராமன் (28), மகேந்திரன் (28), ராதா (58) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.