< Back
மாநில செய்திகள்
7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
9 Oct 2023 12:46 AM IST

தொழிலதிபர் கொலை வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மேலரதவீதியை சேர்ந்த தொழிலதிபர் குமரன் என்ற குமரவேல் (வயது 47) என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பால்பாண்டி என்ற பவர் பாண்டி (வயது 24), அந்தோணி (25), வெங்கடேஷ் என்ற வெங்கடேஸ்வரன் (25), விஜயகுமார் (28) உள்பட 7 பேரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடாமல் தடுக்கவும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கட்டுப்படுத்தவும் மேற்படி 7 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் ஜெயசீலனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.இதனை தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் மேற்படி 7 பேரும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்