திருவாரூர்
பொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது
|திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு செய்யும் செயலில் இருப்பவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதன்படி திருவாரூர் நகர் ரெயில் காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பிரபாகரன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதைப்போல திருவாரூர் பெரியமில் தெருவை சேர்ந்த நாகய்யன் மகன் ராம் பிரசாத் (31), கூத்தாநல்லூர் பண்டுதக்குடியை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25), அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராகுல் (24), ஏரவாஞ்சேரி திருவிழிமிழலையை சேர்ந்த ஜோதி மகன் தென்னரசு (39), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் காளீஸ்வரன்(35), மணவாளநல்லூரை சேர்ந்த செல்லதுரை மகன் அபிஷேக்(32) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.