< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேர் கைது
|25 Oct 2023 1:42 AM IST
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட் பகுதிகளில் குவிந்தனர். இந்தநிலையில் அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பணகுடி போலீசார் காயல்பட்டினத்தை சேர்ந்த கபீர் மகன் சதாம் உசேன் (வயது 29), நாங்குநேரியை சேர்ந்த சுந்தரமணி (29), கூடங்குளம் போலீசார் பூலாங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனையும் (33), வள்ளியூர் போலீசார் நம்பியான்விளையை சேர்ந்த வேல்முருகன் (42) என்பவரையும், முன்னீர்பள்ளம் போலீசார் கூதன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (25), வெங்கடேஷ் (23), பாலமுருகன் (28) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அறிவுரைகள் வழங்கி அவர்களை போலீசார் விடுவித்தனர்.