சிவகங்கை
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மோதல்; 7 பேர் கைது
|இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகளுடன் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருவாசகம் என்பவரும் மோட்டார்சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக இருவருடைய மோட்டார்சைக்கிள்களும் மோதியது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருவாசகம் தனது நண்பர்களான விஜய், குகன், சார்லஸ் ஆகியோரை அழைத்து வந்து கோபாலகிருஷ்ணனின் அண்ணன் லோகேஸ்வரனின் காரை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் திருவாசனையும், அவரது நண்பர்களையும் கோபாலகிருஷ்ணன், லோகேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் கண்டவராயன்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் திருவாசன் (39), விஜய், குகன், சார்லஸ், கோபாலகிருஷ்ணன் (32), லோகேஸ்வரன் (33), ஜெயக்குமார் (42) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கைது செய்து விசாரித்து வருகிறார்.