< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை
மாநில செய்திகள்

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

தினத்தந்தி
|
15 Aug 2023 3:15 PM IST

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ெரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையம் வரும் வாகனங்கள், பயணிகள் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விமானத்தில் ஏறும் முன்பதாக பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் 24 மணிநேரமும் கண்காணிக்கின்றனா்.

இந்த நிலையில் உச்சகட்ட பாதுகாப்பாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விமான நிலையம் வரும் வாகனங்கள், பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20-ந்தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையங்கள், மல்டி கார் பார்க்கிங், விமான நிலைய ஆணையக கட்டிடம், நுழைவு வாயில் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மூவர்ண விளக்குகளால் விமான நிலையம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு மின்விளக்கு ஒளியில் ஜொலிப்பதை மக்கள் வெகுவாக பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.

மேலும் செய்திகள்