< Back
மாநில செய்திகள்
கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி - இருவர் கைது
மாநில செய்திகள்

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி - இருவர் கைது

தினத்தந்தி
|
8 Oct 2022 9:35 PM IST

கனடாவில் வேலை வாங்கி தருவதாக நபர் ஒருவரிடம் ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கரூர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நித்தின் குமார். கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த நவீன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும், கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, நித்தின் குமாரிடம், 7 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

பின்னர், போலி பணி நியமன ஆணையை கொடுத்து, ஏமாற்றியதாக தெரிகிறது. இதுக்குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன், வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்