< Back
மாநில செய்திகள்
போலி தங்கக்காசுகளை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

போலி தங்கக்காசுகளை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
10 Jan 2023 6:45 PM GMT

புதையல் என்று கூறி போலி தங்கக்காசுகளை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் புகார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி மகன் அழகுநாதன்(வயது 39), டிராவல்ஸ் உரிமையாளரான இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கர்நாடகா மாநிலம் ஆர்கானல் பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ், (40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் என்னிடம் வேன் டிரைவராக சேர்ந்தார். பின்னர் நன்கு பழக்கம் ஏற்பட்டதால், ரமேஷ், அவரது நண்பருக்கு பெங்களூருவில் புதையில் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான தங்க காசுகள் அதில் உள்ளதால், அதை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய நான், ரூ.7 லட்சத்துடன், கடந்த டிசம்பர் 31-ந் தேதி ஆர்கானல் சென்று ரமேஷிடம் கொடுத்துவிட்டு, 600 கிராம் தங்க காசு வாங்கினேன். பின்னர் வீட்டிற்கு வந்து அந்த காசை சோதனை செய்ததில், அது போலியான காசுகள் என தெரியவந்தது. தங்கக்காசு எனக்கூறி, போலி காசு கொடுத்து ஏமாற்றிய ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.

மேலும் செய்திகள்