< Back
மாநில செய்திகள்
7 கி.மீ. தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை-அஞ்சுகண்டறை சாலை;பொது மக்கள் கடும் அவதி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

7 கி.மீ. தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை-அஞ்சுகண்டறை சாலை;பொது மக்கள் கடும் அவதி

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

7 கி.மீ. தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை-அஞ்சுகண்டறை சாலையால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குலசேகரம்,

7 கி.மீ. தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை-அஞ்சுகண்டறை சாலையால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

திருநந்திக்கரை அருகே கோதையாறு இடது கரைக்கால்வாய் கரையோரமாக அஞ்சுகண்டறையில் இருந்து வெட்டிமுறிச்சான், தொறநல்லூர், மணியன்குழி, மிஞ்சிலாமடக்கு வழியாக பேச்சிப்பாறை சந்திப்பு செல்லும் சாலை சுமார் 7 கி.மீ. தூரம் கொண்டது. இந்த சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறி பல் இளிக்கும் சாலையாக உருவெடுத்துள்ளது. சில இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு மண்சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதில் இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமான நிலையில் உள்ளது.

தொழிலாளர்கள் அவதி

இதனால் இந்த வழியாக தினமும் அதிகாலையில் ரப்பர் தோட்டங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், பேச்சிப்பாறை தோட்டக்கலை துறை அலுவலகத்திற்குச் செல்லும் விவசாயிகள் என ஏராளமானோர் படும்பாடு சொல்லி மாளாது. சில நேரங்களில் கீழே விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் கூறுகையில், அஞ்சுகண்டறை முதல் பேச்சிப்பாறை வரையிலான 7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையை சீரமைக்கக் கேட்டு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை ஊரக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்ற பின்னரும் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை என்றார்.

மேலும் செய்திகள்