< Back
மாநில செய்திகள்
சென்னையில் அமைச்சரை சந்திக்க சென்ற போது  விபத்து - 7 பேர் காயம்
மாநில செய்திகள்

சென்னையில் அமைச்சரை சந்திக்க சென்ற போது விபத்து - 7 பேர் காயம்

தினத்தந்தி
|
10 Jun 2022 1:10 PM IST

சென்னையில் அமைச்சரை சந்திக்க சென்ற போது வேன் காரின் மீது மோதியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.


மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மின்துறை ஊழியர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் சங்கத்தின் சார்பாக சென்னையில் அமைச்சரை சந்திக்க நேற்று காலை ஒரு வேனில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கடலுார் – பாண்டிச்சேரி சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பு அருகே சென்ற போது, எதிரே காரைக்கால் நோக்கி சென்ற கார் மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் இணைந்து, விபத்தில் வேனில் காயமடைந்த மணிமாறன்(வயது 45), கிருஷ்ணமூர்த்தி (57), லெனின் (47), சிவசண்முகம் (57) மீட்டு, அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், காரில் சிக்கிய 3 பேரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் வரவைத்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்