< Back
மாநில செய்திகள்
ஐ.சி.எப். அருகே தடுப்புச்சுவரில் மாநகர பஸ் மோதி விபத்து
சென்னை
மாநில செய்திகள்

ஐ.சி.எப். அருகே தடுப்புச்சுவரில் மாநகர பஸ் மோதி விபத்து

தினத்தந்தி
|
27 April 2023 10:21 AM IST

ஐ.சி.எப். அருகே தடுப்புச்சுவரில் மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த சிலருக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பிராட்வேயில் இருந்து கொரட்டூர் வரை செல்லக்கூடிய மாநகர பஸ் தடம் எண்-35 நேற்று காலை 11 மணியளவில் ஜ.சி.எப் அருகே வந்து கொண்டிருந்தது. 25 பயணிகளுடன் டிரைவர் தேவராஜ் என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். இந்த நிலையில், திடீரென ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறிய அரசு பஸ், சாலை நடுவே உள்ள 3 அடி உயரமுள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிலருக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீஸ் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்