< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
கிணற்றில் கிடந்த 7 அடி நீள நல்லபாம்பு
|10 Jun 2023 12:15 AM IST
கிணற்றில் கிடந்த 7 அடி நீள நல்லபாம்பு
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வாணியங்கொல்லையை சேர்ந்த கணேசதேவர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு தண்ணீரில் மிதந்து தவித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட ஊராட்சி மன்ற தலைவர் லதாபாலமுருகன் உடனடியாக முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் அன்புநிதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கிணற்றில் இறங்கி பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை சாக்கு பையில் போட்டு தீயணைப்பு வீரர்கள் வனக்காட்டு பகுதியில் கொண்டு விட்டனர். கிணற்றில் கிடந்த பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.