< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

தினத்தந்தி
|
10 Dec 2023 3:51 AM IST

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி நகர போலீஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கும்,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கும்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி டி.எஸ்.பி. அசோக் தஞ்சை புறநகருக்கும்,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தயாள்நாயகி விழுப்புரம் குற்றப்பிரிவுக்கும்,

திண்டுக்கல் நகர டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கும்,

ராமநாதபுரம் டி.எஸ்.பி. ராஜா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்