< Back
மாநில செய்திகள்
லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு; சாவு எண்ணிக்கை 7 ஆனது
சென்னை
மாநில செய்திகள்

லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு; சாவு எண்ணிக்கை 7 ஆனது

தினத்தந்தி
|
11 July 2022 2:44 PM IST

லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி சென்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே போலாம்மா குளம் பகுதியில் சென்றபோது முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் பக்கவாட்டில் அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்து மேல்மருவத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை திருவொற்றியூர் முன்னம் மேட்டுப்பாளையம் காலடிப்பேட்டையைச் சேர்ந்த எர்லைட் என்ற செல்வராஜ் (வயது 35) சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்