< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
ரூ7 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள்
|15 July 2022 11:09 PM IST
திருக்கோவிலூரில் ரூ7 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் ஆற்காடு-தூத்துக்குடி சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதாவது ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியில் தபோவனத்தில் இருந்து அரும்பாக்கம் வரை உள்ள சாலை, ரூ.3 கோடியில் அரும்பாக்கத்தில் இருந்து கீழத்தாழனூர் வரை உள்ள சாலை ஆகிய இரு சாலைகளை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கே.எஸ்.ராஜகுமார், உதவி கோட்ட பொறியாளர் பி.திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் பி.புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.