< Back
மாநில செய்திகள்
தாட்கோ மூலம் ரூ.7 கோடி கடன் உதவி
தேனி
மாநில செய்திகள்

தாட்கோ மூலம் ரூ.7 கோடி கடன் உதவி

தினத்தந்தி
|
20 July 2022 2:49 PM GMT

தேனி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ரூ.7 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்போது வரை தேனி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 191 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 79 லட்சத்து 79 ஆயிரத்து 459 மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 13 ஆயிரத்து 616 மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற விரும்பும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்