< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது
|25 May 2022 7:24 PM IST
சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சீமானின் உருவபொம்மையை பிடுங்கி, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.