< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
|5 Jun 2022 10:03 PM IST
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் ராயல் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு பணம் வைத்து சூதாடிய காவேரிப்பட்டணம் மாதேஷ் (வயது 49), அப்சர் (37), முரசீர் (36), சபியுல்லா (51), முரளி (47), ரபிக் (60), யுசுப் (50) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,300 பறிமுதல் செய்யப்பட்டது.