< Back
மாநில செய்திகள்
குமரி மாவட்டத்திற்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை...!
மாநில செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை...!

தினத்தந்தி
|
1 Feb 2023 3:45 PM IST

குமரி மாவட்டத்திற்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரி,

தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழாவானது கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்