< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
29 Nov 2022 2:28 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.

திருவண்னாமலை,

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிசம்பர் 6ம் தேதி அதிகாலை பரணி தீபத்திற்கு 3000 முதல் 4000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை மகா தீபத்திற்கு 5000 முதல் 6000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்புப் பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்