< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
யோகாவில் 6-ம் வகுப்பு மாணவன் உலக சாதனை
|5 Feb 2023 7:04 PM IST
யோகாவில் 6-ம் வகுப்பு மாணவன் உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சேர்ந்த முரளி- வித்யா தம்பதியினரின் 11 வயது மகன் ஹரீஷ். தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், சேது பந்தா பூர்ண சக்கரபந்தாசனத்தில் ஒரு நிமிடம் 30 நொடிகளில் 102 வேகமான சுழற்சிகளை 180 டிகிரியில் செய்து புதிய உலக சாதனை படைத்தார்.
இந்த உலக சாதனை நோவா வோல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. உலக சாதனை படைத்த மாணவர் ஹரீசை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.