தஞ்சாவூர்
6 கிலோ வெள்ளி- 4½ பவுன் நகைகள் கொள்ளை
|கபிஸ்தலம் அருகே வீட்டின் பூட்ைட உடைத்து 6 கிலோ வெள்ளி மற்றும் 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே வீட்டின் பூட்ைட உடைத்து 6 கிலோ வெள்ளி மற்றும் 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னைக்கு சென்றாா்
கபிஸ்தலம் அருகே உள்ள அலவந்திபுரம் மேலஅக்ரகாரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது71). இவர் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார்.இந்த நிலையில் சென்னையில் வசிக்கும் தனது மகன் மற்றும் மகளை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார்.நேற்று காலை சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிா்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 கிலோ வெள்ளி பொருட்கள், 4½ பவுன் நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து கோபாலகிருஷ்ணன் கபிஸ்தலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, மேற்பார்வையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வௌ்ளி பொருட்கள் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.