< Back
மாநில செய்திகள்
மறைந்த தி.மு.க.வினர் 69 பேரின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி
நாமக்கல்
மாநில செய்திகள்

மறைந்த தி.மு.க.வினர் 69 பேரின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மறைந்த தி.மு.க.வினர் 69 பேரின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்.

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் பிள்ளா நல்லூர் பேரூராட்சியில் மறைந்த 20 தி.மு.க. நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கு உதவும் வகையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நினைவஞ்சலி மற்றும் கலைஞரின் குடும்ப நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். பிள்ளா நல்லூர் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. செயலாளருமான சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கலந்துகொண்டு மறைந்த 20 தி.மு.க.வினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் வழங்கினார். முன்னதாக மறைந்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், முன்னாள் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஸ்வா, பிள்ளா நல்லூர் பேரூராட்சி அவைத்தலைவர் மாதேஸ்வரன், பொருளாளர் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், அசோகன், தியாகராஜன், தனபால், பானுமதி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் மறைந்த 49 தி.மு.க. நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலா ரூ.5 ஆயிரம் ரூ.2.45 லட்சத்தை கலைஞரின் குடும்ப நல உதவியாக வழங்கினார். நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சேரன், பேரூராட்சி துணைத் தலைவரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான அ

மேலும் செய்திகள்