கரூர்
வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு
|வாகன விதிமுறைகளை மீறியதாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில், சாலை விபத்துகளை குறைக்கவும், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகன ஓட்டுவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாகன விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 69 வழக்குகள் பதியப்பட்டன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் என 25 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வாகன ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் அல்லது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிந்து, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை வாகன உரிமம் எடுக்க முடியாதவாறு தகுதி இழப்பு செய்யப்படும், மோட்டார் சைக்கிள்களில் பந்தயம் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.