< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கிராம உதவியாளர் தேர்வை 683 பேர் எழுதினர்
|5 Dec 2022 12:30 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 683 பேர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 7 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 683 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 259 பேர் தேர்வு எழுத வரவில்லை.