< Back
மாநில செய்திகள்
ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்

தினத்தந்தி
|
18 May 2023 12:57 AM IST

வீட்டு பத்திரத்தை மீட்டு தருவதாக கூறி ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்/

சென்னை எம்.எம்.ஓ. ஏ காலனி ராமலிங்கம் அப்பார்ட்மென் பி பிளாக் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சாந்தராஜ். இவரின் மகன் ஜெகதீஷ் (வயது 29). இவரின் உறவினர் தென்காசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்கி இருந்தாராம்.

அந்த பத்திரத்தை நெல்லையை சேர்ந்த கணேசன் (40) என்பவர் மீட்டுத் தருவதாக கூறி ஜெகதீசிடம் சுமார் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி இருந்தாராம். ஆனால் அவர் பத்திரத்தை மீட்டு கொடுக்காமல் ஜெயதீசை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்