திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
|திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன.
100 சதவீத தேர்ச்சி பள்ளிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 353 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். ஆனால் 67 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
இதில் ஆவிளிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வி.குரும்பபட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, இ.ஆவாரம்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன.
இதேபோல் பழனி சிறுமலர் உயர்நிலைப்பள்ளி, அக்சயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேவி மெட்ரிக் பள்ளி, வேலன் விகாஸ் மெட்ரிக் பள்ளி, கார்த்திக் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி, கென்னடி மெட்ரிக் பள்ளி, ரேணுகாதேவி மெட்ரிக் பள்ளி, புனித பவுல் மெட்ரிக் பள்ளி, புனித பீட்டர் மெட்ரிக் பள்ளி, ஒட்டன்சத்திரம் பட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, கொசவப்பட்டி அக்சயா அகாடமி மெட்ரிக் பள்ளி, காப்பிளியபட்டி கல்வி மெட்ரிக் பள்ளி, கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி,
திண்டுக்கல் அச்யுதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, எம்.வி.எம். பெண்கள் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி, புனித வளனார் மெட்ரிக் பள்ளி, டி.பி.கே.என். மெட்ரிக் பள்ளி, கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, ராமையன்பட்டி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, காளனம்பட்டி புனித பேட்ரிக் அகாடமி மெட்ரிக் பள்ளி, அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் பள்ளி, நொச்சிஓடைபட்டி கார்மெல் மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் கென்னடி மெட்ரிக் பள்ளி, செவாலியர் அகாடமி மெட்ரிக் பள்ளி, அய்யனார்புரம் சர்வசேவா ஸ்பாரோஸ் மெட்ரிக் பள்ளி, திருமலைக்கேணி நேருஜி மெட்ரிக் பள்ளி, சிறுமலை ஜே.எம்.ஜே. மெட்ரிக் பள்ளி, செந்துறை எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளி, தாடிக்கொம்பு ஸ்ரீலட்சுமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் சோபியா மெட்ரிக் பள்ளி, பி.ஆர்.என்.பி. வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, கே.புதூர் சர்வசேவா உயர்நிலைப்பள்ளி, சீலப்பாடி அக்சயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி.
கொடைக்கானல், நிலக்கோட்டை
கொடைக்கானல் ஆர்.சி. டவுன் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்மலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, என்.பஞ்சம்பட்டி அகஸ்தினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னாளப்பட்டி ஆர்.சி.சகாயராணி உயர்நிலைப்பள்ளி, கொடைக்கானல் சாந்தம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி, கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் மெட்ரிக் பள்ளி, பண்ணைக்காடு ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி, பேத்துப்பாறை புனித தாமஸ் ஆக்னஸ் மெட்ரிக் பள்ளி, கலிக்கம்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர். மெட்ரிக் பள்ளி, குமரப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி, போடிகாமன்வாடி வித்ய சிக்ஷா மெட்ரிக் பள்ளி, வத்தலக்குண்டு மவுன்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீசாரதா வித்யா மெட்ரிக் பள்ளி, அம்மையநாயக்கனூர் கவின் மெட்ரிக் பள்ளி, சேடப்பட்டி சேரன் குலோபல் மெட்ரிக் பள்ளி, பட்டிவீரன்பட்டி லெட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி, சின்னாளப்பட்டி புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, மாரம்பாடி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, மினுக்கம்பட்டி பெட்போர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளி, தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீமகா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, எர்ணம்பட்டி ஆறுபடையப்பன் உயர்நிலை பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.