< Back
மாநில செய்திகள்
ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் பயணம்
சென்னை
மாநில செய்திகள்

ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் பயணம்

தினத்தந்தி
|
2 Feb 2023 8:51 AM IST

ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை விட கடந்த ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் கியூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 21 லட்சத்து 96 ஆயிரத்து 536 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பயண அட்டைகளை பயன்படுத்தி 39 லட்சம் பேர் பயணித்துள்ளார்கள். கியூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்