< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
|12 July 2022 3:02 AM IST
650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் புஞ்சைபுளியம்பட்டி அவினாசி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 38) என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக சதீஸ்குமாரை கைது செய்த போலீசார், 650 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.