< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாண்டஸ் புயல் தாக்கம்: சென்னையில் 644 டன் மரக்கழிவுகள் அகற்றம்...!
|11 Dec 2022 9:48 PM IST
சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644 டன் மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது
சென்னை,
மாண்டஸ் புயலினால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.
இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்ற தொடங்கினார்கள்.
அந்தவகையில் 644.6 டன் எடையுள்ள மரக்கழிவுகள் டிப்பர் லாரிகளின் மூலம் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.